Tamil News Today Live: `விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..!’ - மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்த் வீடு திரும்பினார்..!

Vijayakanth |விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தது. அப்போது அவரின் மனைவி பிரேமலதா அதனை மறுத்து வந்தார். மேலும் அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களையும் பகிர்ந்து நம்பிக்கை அளித்தார். இந்நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.



from India News https://ift.tt/qRnEHdZ

Post a Comment

0 Comments