தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி!
நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்றிருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி வசமிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் புதிதாக ஆட்சி அமைத்திருக்கிறது.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 119 தொகுதிகளில் 64 இடங்களில் வெற்றிப்பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால், 10 ஆண்டுகால சந்திரசேகர ராவ்வின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், முதலமைச்சராக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் அரசு, இன்று பதவியேற்க உள்ள நிலையில், ஐதராபாத்தில் கோலாகல விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/f2xQdJq
0 Comments