கேரளா `கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸைவிட பாஜக மீதுதான் அதிக நம்பிக்கை'- சினேக யாத்திரை சென்ற பாஜக-வினர்

கேரள மாநில பா.ஜ.க சார்பில் `சினேக யாத்திரை' என்ற பெயரில் கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் சர்ச்சுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. சீரோ மலபார் சபையின் செயின்ட் தாமஸ் மவுன்ட்டிலிருந்து இந்த யாத்திரையை பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தொடங்கினார். இது போன்று அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கிறிஸ்தவ மத தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். இது குறித்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் பேசுகையில், ``பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேவாலயங்களுக்கும் சென்று சந்திக்கும் சினேக யாத்திரை என்ற மிகப்பெரிய கேம்பைன் தொடங்கிவிட்டது. பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறோம்.

கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லும் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன்

இதில் எந்த அரசியலும் இல்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனைத்து வீடுகளுக்கும் சொல்வது மட்டும்தான், இந்த சினேக யாத்திரையின் லட்சியம். சமுதாய சமத்துவம், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த யாத்திரை மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டும் சினேக யாத்திரை நடத்தினோம். ஆனால் எல்லா வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த முறை அனைத்து வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்லவிருக்கிறோம். 21-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் சொல்ல உள்ளோம்.

காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் சொல்வதுபோல நாங்கள் இதில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. அரசியல் லாபம், நஷ்டம் குறித்த கணக்குகளை நாங்கள் பார்க்கவில்லை. மணிப்பூர் பிரச்சனையை மிசோரம் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய பிரசாரமாக முன்னெடுத்து சென்றது. ஆனால், காங்கிரஸுக்கு கடந்த முறை இருந்த சீட்டுகளும் பறிபோனது. கிறிஸ்தவ சமூகத்தை, பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முடியாது. 99 சதவிகித கிறிஸ்தவ மக்கள் உள்ள மிசோராமில் எங்களுக்கு இரண்டு மடங்கு சீட்டுகள் கிடைத்தன. ஓட்டும்  இரட்டிப்பாகி உள்ளது.

சினேக யாத்திரையில் பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த சினேக யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸைவிட சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சதீசனை யாராவது நம்புவார்களா. சதீசன் அகங்காரமாக செயல்படுகிறார். இது அனைவரும் சேர்ந்த ஒரு நாடு. காங்கிரஸை விட நம்பிக்கையும் ஆதரவும் பா.ஜ.க-வுக்கு சிறுபான்மை சமூகம் மத்தியில் உள்ளது" என்றார்.



from India News https://ift.tt/ueXC0Io

Post a Comment

0 Comments