``4 மாவட்ட பாதிப்புக்கே அரசு தடுமாறுகிறது..!” - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

சென்னை வெள்ளம் குறித்தும், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "கடந்த சில நாட்களில் பெய்த மழையால் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. சாலைகள், வீடுகள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தால் பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

மழை வெள்ளம்

தமிழக அரசு வெள்ள மீட்புப் பணியில் போர்க்கால நடவடிக்கை எடுக்காமல், செயல்பாடத அரசாக உள்ளது. 450 க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்று லட்சம் வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது. 5 நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீரை வெளியே எடுக்க முடியவில்லை. மழைநீரோடு கழிவுநீரும், கச்சா எண்ணெய்யும் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாய நிலை உள்ளது.

வெள்ளநீர் வடியாததாலும், மின்சாரம் இல்லாததாலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள் உணவுக்கு கையேந்தும் நிலைமை உள்ளது. குழந்தைகளுக்கு பால் கேட்டு மக்கள் கண்ணீருடன் போராடி வருகிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

 மக்களை சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்கள் தயாராக இல்லை. அதிகாரிகளை நியமித்திருக்கிறோம், அமைச்சர்களை நியமித்து இருக்கிறோம் என்று அறிவிப்புகள் வந்து கொண்டே இருங்கிறது, ஆனால் செயல்பாடு இல்லை.

மழை நீர், கழிவுநீர் தேங்கி இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஒருவேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை, ஐந்து நாள்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம், மழை நீரை வெளியேற்ற நாதி இல்லையா? என்று மக்கள் எழுப்பும் வேதனைக் குரல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  காதுகளுக்கு கேட்கிறதா? 

சென்னை மழை வெள்ளம்

மழை நீரை வெளியேற்ற ராட்சத பம்புகளுக்கு டீசல் போட தயாராக இல்லாத நிலையே உள்ளது. எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களத்துக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்டோம். ஆனால், இன்று நான்கு மாவட்ட பாதிப்புக்கே அரசு தடுமாறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து அனுப்புகிற நிவாரண பொருட்களைக் மக்களுக்கு விநியோகம் செய்ய கட்டமைப்பை அரசு ஏற்படுத்தவில்லை.

மிக்ஜாம் புயலிருந்து நான்கு மாவட்ட மக்களை காப்பாற்றமுடியாத நீங்கள், 38 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தால் எப்படி மக்களைக் காப்பாற்றுவீர்கள் என்பதுதான் அச்சமாக உள்ளது.

மழைநீர் வடிகால் பணிக்கு செலவு செய்த 4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/nCPBipM

Post a Comment

0 Comments