``திராவிடக் கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்கவில்லை என்ற ஆளுநரின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தென்ன?”
``முதலில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கவில்லை. `ஆளுநரே வேண்டாம்’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதேசமயம், திராவிடக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் ’தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை எங்கே அங்கீகரித்திருக்கிறார்கள்?’ தீரன் சின்னமலை, வேலுநாச்சியார், மருது சகோதர்கள், வ.உ.சி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஏக்கர் கணக்கில் நினைவிடம் இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இருக்கிறதா, இல்லையே. இந்த விஷயத்தில் தேசிய திராவிட கட்சிகள் தேர்தல் வர இருப்பதால் நாடகமாடுகிறார்கள்.”
``தமிழ்நாடு அரசு, ஆளுநரின் குடைச்சல்களை முறையாக கையாளவில்லை என எதனடிப்படையில் நாம் தமிழர் கட்சி விமர்சிக்கிறது?”
``அறிக்கைவிடுவதை தாண்டி ஆளுநர் எதிர்க்க தி.மு.க என்ன செய்திருக்கிறது. `ஆளுநரை திரும்பப் பெறுங்கள்’ என தி.மு.க இதுவரை போராடியதுண்டா... மத்திய அரசிடம் முறையீட்டதுண்டா. எதுமே செய்யவில்லை என்றால் அடிக்கிற மாதிரி அடிங்க,,அழுகிற மாதிரி அழுறோம் என ஆளுநரும் அரசும் நடந்துக் கொள்வதாகத்தான் தெரிகிறது”
``மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமூக வளர்ச்சிக்கான முதலீடு என்கிறது தி.மு.க, அதனை ஏன் நீங்கள் ஏற்க மறுக்குறீர்கள்!”
``மகளிர் உரிமைத் தொகை திட்டம் தி.மு.க-வுக்கான தேர்தல் முதலீடு. பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசும் இவர்கள்தான் மதுக்கடையை தெருவெங்கும் திறந்துவைத்து குடும்பங்களை அழிவுப் பாதைக்கு வித்திடுகிறார்கள். மகளிர் உரிமைத் தொகைக்காக செலவிடப்படும் நிதியை வைத்து தொழில் நிறுவனங்களை தொடங்கியிருந்தால் மகளிருக்கு மாதச் சம்பளமே கொடுக்கலாம். பசிக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுக்காமல், மீனை மட்டும் கொடுப்பது முன்னேற்றமல்ல”
``நீட், காவிரி விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை கழட்டிவிடச் சொல்கிறீர்களே. I.N.D.I.A கூட்டணி உடைய வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா?”
.`நாங்கள் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்துகிறோம். தண்ணீர் தர மறுக்கும் கட்சியுடன் கூட்டணி எதற்கு என வினவுகிறோம். கூட்டணியில்லை எனச் சொல்லியாவது, ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துங்கள் என்றுதான் கோரிக்கை வைக்கிறோமே தவிர, இதில் எந்த அரசியல் நோக்கங்களும் நாம் தமிழருக்கு கிடையாது”
``தனித்து நிற்பது அரசியல் அறியாமை என்கிறாரே திருமாவளவன், எல்லா தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தினால் 4% எளிதாக வந்துவிடும் என்கிறாரே?”
``எல்லா தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தினால் 4% வந்துவிடும் என்றால் திருமாவளவனும் வேட்பாளரை நிறுத்த வேண்டியதுதானே. தனித்து நின்று பலத்தை காட்டியிருக்கலாமே. தனித்து நின்றால் பயனில்லை என்கிறாரே... ஒட்டிக் கொண்டு இருந்தால் தான் எதாவது நடக்குமா.. எதாவது நடந்ததா... காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு கேட்டாரே...பதிலுக்கு தண்ணீர் பெற்றுதர முடிந்ததா... குறைந்தபட்சம் தி.மு.க அரசின் தவறுகளையாவது விமர்சிக்க முடிகிறதா... எதுவுமே இல்லை. ஒன்றுமே வேண்டாம். ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை நிறுத்துங்கள் ஏன தி.மு.கவிடம் திருமாவளவனால் சொல்ல முடியுமா?”
`நீட் விலக்குக்காகக் கையெழுத்து இயக்கம் நடத்துகிற தி.மு.க-வை ஏன் விமர்சிக்கிறீர்கள்...”
``ஆட்சிக்கு வருமுன் எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்றார்கள்... பின்பு சட்டப் போராட்டம் தான் அந்த ரகசியம் என்கிறார்கள். இதிலென்ன ரகசியம். ரகசியமாக வழக்கு தொடுத்து, ரகசிய விசாரணை நடத்தி, ரகசிய தீர்ப்பு வாங்கித் தருவார்களா... அப்படியாவது செய்தார்களா... அதுவும் இல்லை. இப்போது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை”.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/Wv7xKu4
0 Comments