அதிகாலை முதலே அஞ்சலி செலுத்தி வரும் பக்தர்கள்!
சித்தர் முறைப்படி நல்லடக்கம்:
- பங்காரு அடிகளாரின் உடல் தற்போது அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வந்து சென்றபின், அவரின் உடல் கோயிலின் தியான மண்டபத்திற்கு மாற்றப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.
- பின்னர் கோயிலின் கருவறை அமைந்திருக்கும் பகுதியிலேயே சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்.
- உட்கார்ந்த வடிவில் அடக்கம் செய்யப்படும்.
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் தனது இரங்கல் பதிவில், ``ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர் தமிழிசை நேரில் அஞ்சலி!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடல் பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தமிழிசை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாலை முதலே பக்தர்கல் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைந்தார்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் நேற்று மாலை மறைந்தார். அவருக்கு வயது 82. கடந்த சிலநாள்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் தான் நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார்.
பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘‘பங்காரு அடிகளாரின் சேவைகளை போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.
from India News https://ift.tt/UCbwqJ6
0 Comments