``ஹமாஸின் ஒவ்வொரு உறுப்பினரும் பூமியிலிருந்து துடைத்தெறியப்படுவர்!" - இஸ்ரேல் பிரதமர் காட்டம்

இஸ்ரேல் - பாலஸ்தீனுக்கு மத்தியில் நடந்து வரும் போர் நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே செல்கிறது. தங்கள் எதிர்ப்பை மீறி குடியமர்த்தப்பட்ட யூத அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஹமாஸ் அமைப்பும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களும் போராடி வருகிறார்கள். அதன் நீட்சியாகக் கடந்த 7-ம் தேதி ஹமாஸ் போராளிக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், தனது எதிர்த் தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் | போர் பதற்றம்

இந்த அதிகார மோதலுக்கு இதுவரை சுமார் 2,300-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. முதியவர்கள், குழந்தைகள் உட்பட 150 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் போர் உதவிகளும், இரானுக்கான எச்சரிக்கையும், ஹமாஸ் அமைப்புக்கு இரானின் ஆதரவும், அமெரிக்காவுக்கான எச்சரிக்கையும் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

மேலும், ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் "இது போருக்கான நேரமல்ல" எனப் பேசிய பிரதமர் மோடியும், "நாங்கள் இஸ்ரேலின் பக்கம்..." எனக் குறிப்பிட்டதிலிருந்து போரிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தை எந்தப்புறத்திலிருந்தும் இன்னும் பெரிதாகத் தொடங்கப்படவில்லை என்பதும் புலனாகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டின் அவசரக்கால அரசின் முதல் கூட்டத்திற்குப் பிறகு,``ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் இறந்தவர்கள். ஹமாஸ் படை பூமியிலிருந்து துடைத்தெறியப்படும். இது போருக்கான நேரம்" எனக் குறிப்பிட்டார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம்

இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர், பென்னி காண்ட்ஸ், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் அதிபருடன் பேசியதாகத் தெரிகிறது. இஸ்ரேலிய மக்களின் கோபத்தையும், விரக்தியையும் தாம் புரிந்து கொண்டதாகவும், ஆனால் ஜெனிவா மாநாட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. ஹமாஸ் என்ற குழுவைப் பூமியின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படும்வரை எங்களின் ஒற்றுமையைத் தொடர தயாராக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/ZIiPHKS

Post a Comment

0 Comments