`குவாரி உரிமையாளர்களின் பேராசைக்காக மக்கள் உயிரைக் காவுகொடுக்க முடியாது!' - மனோ தங்கராஜ் காட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்துக்கு லாரிகளில் அதிக அளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டுவருகின்றன. இது சம்பந்தமாக அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி, அபராதம் விதித்துவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 10 டயர்களுக்கு மேலுள்ள லாரிகளில் கனிம வளங்களைக் கொண்டு செல்லக் கூடாது என போக்குவரத்துத்துறை ஒரு முறை தடைவிதித்தது. அதற்கு எதிராக லாரி உரிமையாளர்கள் கோர்ட்டுக்குச் சென்று தடை ஆணை பெற்றனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தடை உத்தரவு பிறப்பித்தார். அதற்கு எதிராகவும் கோர்ட்டுக்குச் சென்று தடை ஆணை பெறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் தடை ஆணைக்கு எதிராக, மாநில அரசு மேல் முறையீடு செய்யவிருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.

நாகர்கோவிலில் காதி விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் காதி விற்பனையைத் தொடங்கிவைத்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனரக வாகனங்கள் ஓடுவதை வரையறை செய்திருக்கிறார்கள். அதைத் தடுத்திருப்பதாகக் கூறுவது தவறான தகவல். இங்கு நான்குவழிச் சாலை இல்லை. எல்லாச் சாலைகளுமே குறுகலான சாலைகளாக இருக்கின்றன. மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள இடங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக நெருக்கமாக மக்கள் வாழ்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு சுமார் 300 பேர் சம்பவ இடத்திலேயே இறக்கிறார்கள். 1,400-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளிகளாக மாறியிருக்கின்றனர்.

எனவே, மக்களின் தேவையை உணர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டிஸ்ட்ரிக்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி கமிட்டியில் அதை ஒழுங்குமுறைப்படுத்தியிருக்கின்றனர். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போயிருக்கின்றனர். அதில் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. மக்களின் நலனுக்காகப் போட்ட சட்டத்தை இந்த அரசு செயல்படுத்துவதற்காக மேல் முறையீடு செய்வது சம்பந்தமாக ஆலோசித்துவருகிறோம். பலமுறை லாரி உரிமையாளர்களையும், குவாரி உரிமையாளர்களையும் அழைத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிரமங்களைச் சொல்லியிருக்கிறோம். ஆனாலும், 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில், ஓவர் லோடாக கனிம வளங்களைக் கொண்டுசெல்வதை அவர்கள் யாரும் தடுக்கவில்லை. அவர்களின் பேராசைக்காக மக்களின் உயிரைக் காவுகொடுக்க முடியாது. குவாரி உரிமையாளர்களின் பண ஆசைக்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது.

கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள்

ஒவ்வொன்றையும் மத்திய அரசின் பட்டியலில், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், மாநில அரசால் முடிவுகள் எடுக்க முடியவில்லை. மாநிலத்துக்கு மாநிலம் போக்குவரத்தை மத்திய அரசு வைத்திருப்பதால், நாம் எதுவும் செய்ய முடியாது. நம் மாவட்டத்திலும் மலை பாதுகாப்பாகத்தான் இருந்தது. எக்கோ சென்சிட்டிவ் ஏரியா 10 கி.மீ என இருந்ததை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 0 முதல் 3 கிலோமீட்டர் எனக் குறைத்தனர். அ.தி.மு.க அப்படிச் செய்ததுதான் பாதி பிரச்னைக்குக் காரணம். அதுபோல ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கான போக்குவரத்தைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற சட்டத்தை மத்திய அரசு கையில் வைத்திருக்கிறது. இவை இரண்டும்தான் எங்களுக்குச் சவாலாக இருக்கின்றன" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/p98KfuS

Post a Comment

0 Comments