அண்ணாமலை: `வெங்காயத்தை பாஜக தலைமை உரிக்குமா என்று, இனிதான் பார்க்க வேண்டும்!' - மாணிக்கம் தாகூர்

பட்டாசு, தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு கொண்டாட்ட விழா விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த பாவடித்தோப்பில் நேற்று இரவு நடந்தது. சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியாவிலேயே பட்டாசுத் தொழிலுக்கு எடுத்துக்காட்டாக சிவகாசி விளங்கிவருகிறது. உலக அளவில் சீனப் பட்டாசுக்குப் போட்டியாக சிவகாசி பட்டாசு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். தற்போது 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டப்படக்கூடிய இந்தப் பட்டாசுத் தொழிலை, ஏற்றுமதியை விரிவுபடுத்துவதன் மூலம், 20,000 கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலாக மாற்ற இயலும்.

ஆனால், அதற்குப் பட்டாசு தொழில்மீதான தடையை நீக்க மத்திய அரசுதான் வழிவகை செய்ய வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக பட்டாசுத் தொழிலை மத்திய அரசு வஞ்சித்துவருகிறது. பட்டாசுத் தொழில் சார்ந்து இருக்கக்கூடிய பிரச்னைகளைக் களைவதற்கு மத்திய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏமாற்றிவருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் ஒரு செங்கல்லை எடுத்துவைத்த அளவுகூட பட்டாசுத் தொழிலுக்கு எதையும் இவர்கள் செய்யவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊர் ஊராகச் சென்று வாக்குறுதி அளிப்பதுபோல், சிவகாசிக்கு வந்தும் வாயால் வடை சுட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

விழா

பட்டாசு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, வருத்தமளிக்கக்கூடியது. வடஇந்தியாவில் காற்று மாசுபடுவதற்காக இங்கு சிவகாசியை தண்டிக்கிறார்கள். காற்று மாசுபடுதல் குறித்து ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில், பட்டாசால் ஏற்படும் மாசுபாடு 22-வது இடத்தில்தான் இருக்கிறது. டெல்லி உட்பட வட இந்தியாவில் முக்கிய நகரங்களில் காற்று மாசுபடுவதற்கு கட்டடப் பணி, பெட்ரோல்-டீசல் வாகனப்புகை போன்றவைதான் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பட்டாசுத் தொழிலுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நிச்சயம் குரல் கொடுப்பேன்" என்றார்.

நூற்றாண்டு விழா
விருந்தினர்கள்..

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, "அண்ணாமலையின் டெல்லி பயணத்துக்குப் பின்பு, அவர் தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைமைதான் முடிவுசெய்யும். அண்ணாமலை, 'எனது பதவி வெங்காயம் போன்றது' எனக் கூறியிருக்கிறார். எனவே, டெல்லி பயணத்துக்குப் பின்பு, அந்த வெங்காயத்தை உரிக்கிறார்களா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க-வின் இறுதிக்கட்ட தலைவராகத்தான் அண்ணாமலை இருக்கப்போகிறார். அவருக்குப் பின்பாக, பா.ஜ.க மக்கள் விரோத கட்சியாக தமிழகத்தில் மாறப்போகிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/0SJAbmi

Post a Comment

0 Comments