தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல்வேறு ஆவணங்களும் பணங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துவருகின்றன. தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்வது மேலும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையில் இறங்கினோம்.
தி.மு.க எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் ஒரு தொழிலதிபரும்கூட, பல்வேறு கல்வி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், மது ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளையும் நடத்திவருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி காலை 6.15 மணிக்கு ரெய்டை தொடங்கியது வருமான வரித்துறை. ஜெகத்ரட்சகனின் அடையாறு இல்லம் தொடங்கி அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேகொண்டனர் அதிகாரிகள். அக்டோபர் 5-ம் தேதி காலை தொடங்கிய சோதனை அக்டோபர் 9-ம் தேதியாகியும் முடிந்தபாடில்லை.
சல்லடை போடும் ஐ.டி!
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில் பலமாக டோனேஷன் பெற்றிருப்பதும், அவை எதுவும் கணக்கில் வரவில்லை என்ற புகாரில்தான் சோதனை தொடங்கியது. மேலும் சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களை வைத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு சோதனை நகர்த்தியிருக்கிறது ஐ.டி.
அவரது வீட்டிலும், வீட்டருகே இருக்கும் அவரது அலுவலகத்திலும் ரொக்கம் சிக்கியதாக தெரிகிறது. ஆகவேதான் பணம் எண்ணும் இயந்திரங்களை ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு எடுத்துவந்தது வருமானவரித் துறை. மேலும் சோதனையின்போது கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அதேசமயம் ரெய்டு தொடங்கி 5 நாட்கள் ஆனாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஐ.டி தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பதும் கவனிக்கதக்கது.” என்றனர்.
சிக்கலில் ஜெகத்ரட்சகன்?
இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் ஜெயராமன், ``தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் பெரியளவில் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகவே செய்துவருகிறார். முதலில் அவருக்குண்டான இடங்களை மொத்தமாக சோதனையிடவே மேலும் சில நாள்கள் ஆகலாம். இந்த சோதனை கிடைக்கப்பெறுகிற ஆவணங்களை வைத்துதான் அடுத்தக் கட்டங்கள் குறித்துச் சொல்லமுடியும்.
ஒருவேளை சோதனையின்போது வரி ஏய்ப்பு விவகாரங்கள் மட்டுமே சிக்கினால் பெரிய பிரச்னைகள் வராது. மாறாக ஊழலுக்கான முகாந்திரமோ, பண மோசடி செய்ததற்கான ஆவணங்களோ சிக்கினால், அது ஜெகத்ரட்சகனுக்கு பெரும் சிக்கலை தரும். அப்படியான ஆவணங்கள் கிடைக்கப் பெறுகிறபோது இதில் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள்கூட உள்நுழையும் வாய்ப்புகள் இருக்கின்றன.” என்கிறார் சுருக்கமாக
பழிவாங்கும் நடவடிக்கையே!
இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது ``தன்னாட்சி அமைப்பாக இயங்கவேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தன் உள்ளங்கையில் வைத்திருக்கிறது பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் வெற்றிக்கு பெரிதும் அச்சுறுத்தலாகவுள்ள ஜனநாயக சக்திகளை பழிவாங்கும் எண்ணத்தில்தான் இவ்வாறு ரெய்டு நடத்துகிறார்கள். தி.மு.க அமைச்சர்கள், எம்.பிக்கள் இடங்களில் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தி தி.மு.க மீது ஊழல் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறது பா.ஜ.க. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றனர்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் நடக்கும் சோதனை குறித்த எந்தவொரு அறிக்கையையும் ஐ.டி தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. சோதனை சிக்கியதென்ன.. ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்குமா ஐ.டி... என்பதை தெரிந்துகொள்ள பொறுத்திருப்போம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/CM1e0ZW
0 Comments