டெல்லியில் எதிர்வரும் 9 ,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெறவிருக்கிறது. 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் உலக தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஷ்டிரபதி பவனில் செப்டம்பர் 9-ம் தேதி நடக்கும் G20 மாநாட்டின் விருந்து அழைப்பில் 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' எனக் குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இப்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1 “இந்தியாவாக இருந்த பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று இருக்கிறது. ஆனால் இப்போது இந்த "மாநிலங்களின் ஒன்றியம்" கூட தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டா, "நாட்டின் மரியாதை மற்றும் பெருமை தொடர்பாக எந்த விஷயத்தை முன்னெடுத்தாலும் காங்கிரஸுக்கு ஏன் ஆட்சேபனை இருக்கிறது... பாரத் ஜோடோ என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தை வெறுக்கிறார்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 'இந்தியா' என்ற வார்த்தையை, அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்ட அமர்வில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், அஸ்ஸாம் முதல்வர் தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில், பாரத குடியரசு எனக் குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/7DyJ26M
0 Comments