"மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார்" - பிரேன் சிங்
மணிப்பூர் இனக்கலவரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன மாணவியும், மாணவனும் ஆயுதமேந்திய குழுவின் பிடியில் சிக்கி காட்டில் இறந்து கிடக்கும் புகைப்படம் கடந்த வாரம் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருப்பதாக முதல்வர் பிரேன் சிங் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேன் சிங், ``நேற்று மாலை அமித் ஷா என்னை அழைத்து, குறிப்பிட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு விமானத்தில் சிபிஐ குழுவை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். மேலும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்றும், யாரும் தப்ப முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்" என்று கூறினார்.
from India News https://ift.tt/5UpTkra
0 Comments