Tamil News Today Live: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! - கோவையில் 20 இடங்களில் சோதனை!

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

என்.ஐ.ஏ

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.



from India News https://ift.tt/Av5iDJ9

Post a Comment

0 Comments