Tamil News Today Live: ஜி20: கொரோனா பாதிப்பு; ஸ்பெயின் அதிபரின் டெல்லி வருகை ரத்து!

டெல்லி ஜி 20: ஸ்பெயின் அதிபர் வருகை ரத்து!

ஜி20

டெல்லியில் நாளை ஜி 20 உச்சி மாநாடு தொடங்க உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு இன்று முதல் வருகை தரவுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் டெல்லியில் நடைபெறும் G20 மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாது என தெரிவித்திருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்பெயின் முதல் துணைத் தலைவர், பொருளாதார விவகார அமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்திருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைத் தொடர்ந்து, ஸ்பெயின் அதிபரும் தனது வருகையை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/CiN2Lqn

Post a Comment

0 Comments