Tamil News Live Today: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் எனமத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம்

இதுதவிர, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மேலும் சில மசோதாக்களும் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டடத்திலும், மற்ற 4 நாள் கூட்டங்கள் புதிய கட்டடத்திலும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/KLG8RQe

Post a Comment

0 Comments