சனாதன விவகாரம்: உதயநிதியைக் கண்டித்து டெல்லியில் `தமிழ்நாடு' இல்லத்தை நோக்கி இந்து அமைப்பினர் பேரணி!

தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், ``கொரோனா, டெங்குபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். சனாதனம் பெண்களை ஒடுக்கிவைத்தது" என்று பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர், உதயநிதியைக் கண்டித்தனர். அதோடு நிற்காமல், `தி.மு.க-வும், அது அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணியும் ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது' என்று பா.ஜ.க பரப்புரை செய்துவந்தது.

இன்னொரு பக்கம், உச்ச நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உதயநிதி பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இது குறித்து, உதயநிதி ஸ்டாலினும், நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை இருப்பதாகவும், நோட்டீஸ் வந்ததும் பதிலளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் இந்து அமைப்பினர் உதயநிதிக்கு எதிராகப் பேரணி

இந்த நிலையில், சனாதன விவகாரத்தில் உதயநிதியைக் கண்டித்து டெல்லியில் இந்து அமைப்பினர் தமிழ்நாடு இல்லத்தை நோக்கிப் பேரணி மேற்கொண்டிருக்கின்றனர். இந்து மதமார்கள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு இல்லத்தின் முன்பு இவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கையாக டெல்லி போலீஸார் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு தடுப்புகளை அமைத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.



from India News https://ift.tt/OtWEoB3

Post a Comment

0 Comments