``உதயநிதி தன் அம்மாவிடம், `சனாதனத்தை ஒழிப்பேன்’ எனக் கூறியிருந்தால்... அறைந்திருப்பார்!” - அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை `என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஆண்டிபட்டி தொகுதியில் பயணத்தை முடித்துவிட்டு கம்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். முன்னதாக தேனி மாவட்ட பாஜக மூத்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். 

நிர்வாகிகள் சந்திப்பு

கம்பம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணத்தை முடித்துவிட்டு பேசிய அண்ணாமலை, ``தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுவையான திராட்சை விவசாயம் லட்சக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கம்பம் பள்ளதாக்கு திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. செழிப்பான விவசாயம் நடக்கும் பகுதி என அறியப்பட்டாலும் விவசாயத்திற்கு தண்ணீர்  தட்டுப்பாடு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அது குறித்து பேசவே இல்லை. இதேபோல கண்ணகி கோயில் விவகாரத்திலும் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டனர். கேரள அரசு கம்பம் பகுதியை குப்பை மேடாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக மருத்துவக் கழிவுகளை குவிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை, கேரள முதல்வர் பினராயி விஜயனை திருப்தி படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார். 

நடைபயணம்

நடைபயணத்தின் போது கம்பத்தில் உள்ள பெரிய கல்வி நிறுவனம் யாருடையது என கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தேன். அந்த கல்வி நிறுவனத்தை நடத்துபவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் கஞ்சா வியாபாரி என்றும் தெரிவித்தார். இந்தியாவின் கஞ்சா தலைநகராக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் கம்பம் தலைநகராக இருக்கிறது. 

சாராய ஆலைகள் நடத்துவது திமுக-வினர் தான். அவர்கள் தான் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். இந்தி பள்ளிகள் நடத்துகிறார்கள். இவர்கள் தான் இந்தியை ஒழிப்போம் என்கிறார்கள். காங்கிரஸ், திமுக ஆட்சியில் நீட்டை கொண்டுவிட்டு இப்போது நீட்டை எதிர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டி விளையாட்டு என காங்கிரஸ், திமுக ஆட்சியில் தடை செய்தவர்கள், பிறகு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கட்சி திமுக என்கிறார்கள். இதேபோல மீத்தேன் விவகாரமும் முதலில் எதிர்ப்பு தெரிவித்து பிறகு ஆதரவு நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை 1971-ல் கருணாநிதி வரவேற்றார் . இப்போது அவருடைய மகன் ஸ்டாலின் எதிர்க்கிறார்.

கம்பத்தில் அண்ணாமலை

இந்து தர்மத்தில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அது மனிதர்கள் உருவாக்கியது. இந்து தர்மத்தில் தவறில்லை. அதில் மனிதர்கள் ஏற்படுத்திய தவறை விவேகானந்தர் போன்ற மகான்கள் வந்து சரிசெய்துள்ளனர். எனவே இந்து தர்மத்தை ஒழிப்போம் என்பதை ஏற்கமுடியாது. சனாதனம் கடவுளை எப்படி கும்பிட வேண்டும், எப்போது கும்பிட வேண்டும் என்பதை சொல்லவில்லை. எப்போது வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம், வழிபடலாம். முன்னோர்களை வழிபடலாம். கம்பத்தில் கூட பட்டத்து காளையை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இப்படிபட்ட சனாதனத்தைத் தான் உதயநிதி ஒழிப்பேன் என்கிறார்.  உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின் தீவிர ஆன்மிகவாதியாக உள்ளார். அவரிடம் சென்று உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறியிருந்தால், படார் படார் என அறைந்திருப்பார்” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/6sa1oZ5

Post a Comment

0 Comments