``இதனால்தான் அரசியலிலிருந்து விலகினேன்" - 9 நாளில் கட்சியிலிருந்து விலகியது குறித்து அம்பத்தி ராயுடு

2019-ம் ஆண்டு உலக கோப்பை ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணிக்கு தான் தேர்வாகாத அதிருப்தியில் அதிரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் வெற்றிக் கோப்பையோடு அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார். அதோடு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை அரசியலில் ஆடத் தயாரானார் அம்பத்தி ராயுடு.

அம்பத்தி ராயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

விரைவில் ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவேன் என்றும், அதற்கு முன் மக்களின் பிரச்னைகளை அறிய முடிவுசெய்திருக்கிறேன் என்றும் உறுதியாகக் கூறிவந்தார். அதற்கேற்றாற்போல, கடந்த டிசம்பர் 28-ம் தேதியன்று, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

ஆனால், கட்சியில் சேர்ந்த ஒன்பதே நாள்களில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. நேற்று முன்தினம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்திருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என அம்பத்தி ராயுடு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து தான் ஏன் விலகினேன் என்று அம்பத்தி ராயுடு விளக்கமளித்திருக்கிறார்.

இதுகுறித்து, அம்பத்தி ராயுடு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``துபாயில், ஜனவரி 20-ம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ILt20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நான் பிரதிநிதித்துவப்படுத்தவிருக்கிறேன். எனவே, தொழில்முறை விளையாட்டை விளையாடும்போது அரசியல் ரீதியில் நான் தொடர்பில்லாதவராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/jdlT4zD

Post a Comment

0 Comments