ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழகம் ஊழல் வழக்கு பதிவுசெய்தது. மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்குச் சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று, அதிகாலை 3 மணிக்குக் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைதுசெய்யக் கைது வாரன்ட்டை அவருக்கு அளித்தாலும், சந்திரபாபு நாயுடு எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பதால், அவரை காலை 6 மணி வரை கைதுசெய்ய அனுமதிக்க முடியாது என எஸ்.பி.ஜி அதிகாரிகள் தெரிவித்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/41c717b3-76cf-4780-84bb-225ca49ff1a6/F5oMdwLaYAAIetG.jpg)
அதைத் தொடர்ந்து 6 மணிக்குப் பிறகு கைதுசெய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, இன்று காலை விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா , ``அரசியல் ஆதாயங்களுக்காக முன்னாள் முதல்வர் பொய்யாகச் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் சட்டபூர்வ விதிகளின்கீழ் ஆதாரபூர்வமான எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். எனவே, சந்திரபாபு நாயுடு கைதில் சட்ட விதிமீறல் இருக்கிறது. அவர் ஊழல் செய்ததாக குறிப்பிட்ட துறை தொடர்பான முடிவுகள் அனைத்தும், மாநில அமைச்சரவையால் எடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முடிவுடன் தொடர்புடையவை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/d6a339ee-e40e-42e1-84f6-8e01ad007cd2/F5plKxZaYAA4BH_.jpg)
எனவே, அது மாநில அரசின் முடிவாகும். அதனால், குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதன் மூலம் அதைக் கேள்வி கேட்க முடியாது. திறன் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத் துறைக்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.360 கோடி, 2015-16-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் இணைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதில் செய்யப்படும் செயல்கள் தொடர்பாக எந்த குற்றப் புகாரும் செய்ய முடியாது" என வாதிட்டிருக்கிறார். காவல்துறை தரப்பு, ``முன்னாள் முதல்வர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை" என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
from India News https://ift.tt/tRbimrv
0 Comments