செந்தில் பாலாஜி: அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு; நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உட்பட 8 இடங்களில் சோதனை!

சட்ட விரோத பணமோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல் இந்த மூன்று மாத காலத்தில், `செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசாணை, அவர் மற்றும் அவரின் சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3,000 குற்றப்பத்திரிகை தாக்கல்,

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியது, இறுதியாக நேற்று, ஜாமீன் விவகாரத்தில் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது எனப் பல நிகழ்வுகள் அரங்கேறியிருக்கிறது.

இதற்கிடையில், `செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியானதல்ல. அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.

அமலாக்கத்துறை

இந்த நிலையில், சென்னையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/RIxpBuj

Post a Comment

0 Comments