Tamil News Today Live: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்... கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்?!

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் - திருப்பி அனுப்பிய ஆளுநர்?!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்வது தொடர்பான கோப்பை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற கூறிய வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுவதோடு, இந்த நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனினும் ஆளுநர் மாளிகையில் இருந்தோ அரசு தரப்பில் இருந்தோ இன்னும் வெளிப்படையாக இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/a7ewQEA

Post a Comment

0 Comments