Metro: தெழில்நுட்ப கோளாறால் ரயில் சேவையில் பாதிப்பு: பயணிகள் அவதி; சென்னையில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பல்வேறு இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்லும் விதமாக, விம்கோ நகர் முதல், விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சின்னமலை மெட்ரோ நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் ரயில்கள் செல்கிறது.

சென்னை மெட்ரோ

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை ஆலந்தூர் இடையேயான மெட்ரோ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ``தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை மெட்ரோவிலிருந்து, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, ஒற்றை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ

வழக்கமான சேவைகள், விம்கோ நகர் மெட்ரோ முதல், சின்னமலை மெட்ரோ வரை நீல வழித்தடத்தில் தற்போது இயக்கப்படுகின்றன. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கேற்றவாறு, பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்திருக்கிறது.

மெட்ரோ சேவை பாதிப்பு காரணமாக சென்னையில் வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகிறது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.



from India News https://ift.tt/Hdn1fDP

Post a Comment

0 Comments