புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். தொடர்ந்து, அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ```அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமா, நான் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்து விட்டதாக கூறுகிறாரே’ என்று கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வில் நான் இருந்த போது எதுவும் உண்ணவில்லை. அப்புறம் எப்படி நான் உண்ட வீட்டிற்கு நான் துரோகம் செய்ய முடியும்.
நான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவன் இல்லை. ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன் பட்டவர். ஜெயலலிதாவிற்கு நான் நல்லது தான் செய்திருக்கிறேன். அவர் எனக்கு நன்மை ஏதும் அதிகம் செய்யவில்லை. ஜெயலலிதாவை நான் காப்பாற்றிக் கொண்டு வந்தததால் தான் அவர் முதலமைச்சரனார். ஜெயக்குமார் யார் அவர் எப்போது அ.தி.மு.கவிற்கு வந்தார். ஜெயக்குமார் போன்றவர்கள் ஏன் என்னைப்பற்றி கருத்துசொல்கின்றனர் என்று தெரியவில்லை. அவர் மறைந்துவிட்டார். இது எல்லாம் முடிந்துபோன விஷயம். இந்த விவாதம் தற்போது தேவையில்லாத ஒன்று. 35 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் நடந்த சம்பவத்தை தற்போது பேச தேவையில்லை

வேறு மாநிலத்தில் ஆளுநராக இருக்கிற தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்துப் பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமாகாது. தமிழிசை இந்த விவகாரத்தில் கருத்து சொல்லத் தேவையில்லை.ஆளுநராக இருந்து கொண்டு அரசியல் பேசுவது தவறு. அரசியல் பேச வேண்டும் என்றால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் ரீதியான கருத்துக்களைக் கூறலாம். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகம் மட்டும் விலக்கு கேட்கிறது.
இதனை, பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு தர முடியாத சூழல் இருக்கிறது. மாணவர்களும் `நீட்' தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நீட் தேர்விலும் வெற்றி பெற்று வருகின்றனர்.ஆனாலும், நீட் தேர்வை ரத்து செய்ய தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். துரதிர்ஷ்டவசமாக ஒரு சில சம்பவங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது. நான் எம்.பியாக இருக்கிறேன். எந்த பதவிக்காக நான் பேசப்போகிறேன். காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை இரு மாநில கட்சிகள் பேசி தீர்க்க கூடியதல்ல. இது தொடர்பாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது"என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/EHPRtv4
0 Comments