திமுக மேயர் இந்திராணி பொன்வசந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக மண்டலத் தலைவர்கள், குழுத்தலைவர்கள், கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் விமர்சித்து பேசுவதும், வெளியில் போராட்டம் நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தான் கவுன்சிலராக உள்ள 79-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து முறையிட்டும் மேயரும், மாநகராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடந்த வாரம் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்றும் கூறி திமுக கவுன்சிலரான லக்சிகா ஸ்ரீ பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தியது மதுரை திமுக-வுக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெயிலிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் சாலையில் அமர்ந்து லக்சிகா ஸ்ரீ போராட்டம் நடத்தினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
இவர் போராட்டம் நடத்திய நேரத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் வடக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் இருந்தார்.
நீண்ட நேரத்துக்குப்பின் மாநகராட்சி அதிகாரிகள் வந்து கவுன்சிலர் லக்ஷிகா ஸ்ரீயிடம் பேசி சமாதானப்படுத்தினார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கவுன்சிலர் லக்ஷிகா ஸ்ரீ, "இப்பிரச்சனை நீண்ட நாட்களாக என் வார்டில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து பலமுறை மாமன்ற கூட்டத்தில் பேசியும், மேயர், ஆணையாளரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தொடர்ச்சியாக புகார் அளித்தாலும் கண்டுகொள்ளாமல் எனது வார்டை புறக்கணிக்கின்றனர். அதனால்தான் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினேன்" என்றார்.
மாநகராட்சி அலுவலர்களோ, "பழங்காநத்தம் முதல் ஜெய்ஹிந்துபுரம் வரை கழிவு நீர் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதாள சாக்கடைக் குழாய் சேதமடைந்து கழிவு நீர் நீரேற்ற நிலையத்திற்கு செல்லாமல் வெளியேறி சாலையில் தேங்கியது. அதை தினமும் லாரிகள் மூலம் உறிஞ்சி எடுக்கபட்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.
மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்துது ஒருபக்கம் இருந்தாலும் திமுக கவுன்சிலர்களை மேயர் தரப்பு சரியாக கவனிப்பதில்லை, மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பெரும்பாலான கவுன்சிலர்களால் வைக்கப்பட்டு வருகிறது. அதுவும் இதுபோன்ற போராட்டங்களுக்கு காரணம் என்று திமுகவினரால் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் மேயரை எதிர்த்து போராட்டம் நடத்திய கவுன்சிலர் லக்சிகா ஸ்ரீ குறித்து மேயர் இந்திராணி தரப்பினர் மாநகரச் செயலாளர் கோ.தளபதி மூலம் தலைமையில் புகார் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/QsZLugY
0 Comments