இந்தியாவில் அதிக அளவில் மாயமாகும் பெண்கள்! - `பகீர்' கிளப்பும் மத்திய அரசின் தரவுகள்! - ஓர் அலசல்

அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வது பற்றி அறிவுரைகளை, ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அவை உள்துறை அமைச்சகத்தின் https://www.mha.gov.in இணையதளத்தில் கிடைக்கின்றன. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையும் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் காணாமல்போன வழக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

காவல்துறை, குழந்தைகள் நலக் குழுக்கள் மற்றும் சிறார் சீர்திருத்த வாரியம் ஆகியவற்றுக்குக் காணாமல்போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது மீட்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளைக் கையாள்வதற்கு உதவி, காணாமல்போன குழந்தைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் தொடர்பாக சேவைகளை இயக்கி வருகிறது.

ரயில் நிலையங்களில் உதவி:

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஹெல்ப் லைன் 1098 என்ற எண்னை 24 மணிநேரமும் செயல்படுத்தி வருகிறது. இது தவிர ரயில்வே சைல்டு லைன் என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. முக்கியமான ரயில் நிலையங்களில் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்காக இது இயக்கப்படுகிறது. மேலும், 'ட்ராக் சைல்டு போர்டல்' என்ற திட்டத்தையும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடங்கியிருக்கிறது. காணாமல்போகும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.

ஒன் ஸ்டாப் சென்டர்கள்:

பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் `ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற திட்டத்தையும் நாடு முழுதும் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பெண்கள் தனி இடங்களிலோ, பொது இடங்களிலோ வன்முறையால் பாதிக்கப்பட்டால் உடனடி மற்றும் சாதாரண உதவிகளை இந்த மையங்கள் செய்யும். காவல், மருத்துவம், சட்டம் சார்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட உதவிகளை இந்த ஒன் ஸ்டாப் சென்டர்கள் மூலம் பெறமுடியும். வன்முறைக்கு எதிரான போராட்டத்துக்கான உளவியல் ஆலோசனையும் இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

18 வயதுக்குகீழுள்ள பெண் பிள்ளைகள் காணாமல்போனதன் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 13,278 பேர், 2021-ம் ஆண்டில் மட்டும் காணாமல்போயிருக்கின்றனர். இதே ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 90,113 பெண் குழந்தைகள் (18 வயதுக்கும் கீழ் உள்ளோர்) காணாமல்போயிருக்கின்றனர். நாடு முழுவதும் 2019 முதல் 2021 வரை மொத்தமாக 10,61,648 பெண்கள் காணாமல்போயிருக்கின்றனர். இதே காலகட்டத்தில் 2,51,430 பெண் குழந்தைகள் காணாமல்போயிருக்கின்றனர்.

பெண்கள் மாயம்

இதற்கு முன்னதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், சமீபத்தில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது. அதில் 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் காணாமல்போனதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சட்டம் - ஒழுங்கைப் பேணி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது, குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு என்று குறிப்பிட்டது.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

இவ்வாறாக நாடு முழுவதும் பெண்கள் காணமல்போவதற்கு காரணங்கள் என்னென்ன... இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து நம்மிடம் பேசினார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகந்தி, “2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின்போது, `பாலியல் வன்கொடுமை பற்றி கேள்விப்படும்போது வெட்கத்தால் தலைகுனிய வேண்டியிருக்கிறது' என்று கூறி, இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தார். ஆனால், சமீபகாலமாக பெண்கள், குழந்தைகள்மீதான வன்முறைகள் அதிகமாகி கொண்டேதான் போகின்றன. இதில் மாநில அரசை மட்டும் குறை சொல்லி, அவர்கள்தான் பொறுப்பு என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்" என்றவர், ``பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அதிகமாகிவிட்டது” என்கிற அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்தார்.

சுகந்தி

“பாலியல் தொழில்களுக்காக பெண்கள் மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்படுவதை விட... நாடுவிட்டு நாடு கடத்தப்படுவது அதிகம். நுகர்வு கலாசாரம் இப்படியான சூழலை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்படி பெரிய மாஃபியாக்களால் பெண்கள் பண்டமாகுவதை, ஆளும் அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். சில இடங்களில் வறுமையின் காரணமகாவும் சிலர் விற்கவும் செய்கின்றனர். பாலியல் தொழிலுக்காக டீனேஜ் பெண்கள் கடத்தப்படும்போது, ஆரம்பத்தில் அவர்களுக்கு வேதனையாக இருந்தாலும், போக போக வேறு வழியே இன்றி அடிமையாகிவிடுகிறார்கள்.

சிலர், ‘நம்மை கடத்திவிட்டார்கள். இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்’ என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். சிலரைப் பணம் கேட்டும், சிலரை வீட்டுப் பணிகளுக்காகவும் கடத்துகிறார்கள். அதோடு, சிலர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக கடத்தப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது.

இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து நாங்கள் மீட்ட குழந்தைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எங்களைப் போன்ற அமைப்புகள் கண்ணில்படும் குழந்தைகளை மீட்கிறோம். அப்படி இல்லாத குழந்தைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குழந்தை கடத்தல், சிறார்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து எத்தனையோ சட்டங்கள் இருந்தும், அவற்றைக் கண்டிப்புடன் பின்பற்றாததால்தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கின்றன” என்றார்.

கார்த்தியாயினி

“2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின்போது, ‘பாலியல் வன்கொடுமை பற்றி கேள்விப்படும்போது வெட்கத்தால் தலைகுனிய வேண்டியிருக்கிறது’ என்று கூறி, இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தார்” என்கிறார் பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கார்த்தியாயினி. மேலும் தொடர்ந்தவர், ``பல ஆண்டுகளாக பெண்களுக்கு நடைபெற்று வரும் கொடுமைகளை களைய பல திட்டங்களை அறிமுகம் செய்ததோடு, பெண்கள் சுயமாக வாழ பல முன்னெடுப்புகளை எடுத்தது பா.ஜ.க அரசாங்கம். அதோடு ஜிகாத்கள் மூலம், மதம் மாறிய பெண்களைப் பாதுகாத்து வருவதும் இந்தியாதான். ஜிகாத்களால் பல நாடுகளில் திக்குத்தெரியாமல் இருந்த பெண்களை மீட்டு வந்தது பாரத பிரதமர் மோடியின் அரசாங்கம். இதில் மத்திய அரசை மட்டும் குறை சொல்வது அர்த்தமற்றது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆட்கடத்தல் குறித்து தனி ஆய்வு நடத்தி வரும் சமூகச் செயற்பாட்டாளர் ஆண்டோ நம்மிடம் பேசுகையில், “காணாமல்போவது, ஆட்கடத்தல் குறித்தான தரவுகள் பொதுவாக காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகள் மற்றும் AHTC எனப்படும் Anti-Human Smugglers / Trafficking Circle யூனிட்களிலிருந்து பெறப்படுகின்றன. கட்டாயப்படுத்தி வேலையில் சேர்ப்பது, சட்டவிரோதமாக எழுதி வாங்கிக் கொண்டு வேலைக்கு அமர்த்துவது போன்ற இடங்களில் உள்ளோர்களையும் AHTC யூனிட் கணக்குக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அதோடு, வீட்டைவிட்டு வெளியேறுபவர்கள், வேலைக்காகச் சொல்லாமல் வருபவர்கள், போதைக்கு அடிமையாக வெளியேறுபவர்கள் என பத்து பதினைந்து பிரிவுகளின்கீழ் மாதா மாதம் இதைக் கணக்கிடுகிறார்கள்.

ஆண்டோ

சில இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பவர்களையும் சைல்டு மிஸ்ஸிங் கேட்டகரிக்குள் சேர்த்து விடுகிறார்கள். அதேபோல் போக்சோ சட்டத்தில் கைதாகும் பெண் குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அவர்களையும் காணமல்போனதாக சேர்த்துகொள்ளும் தவறுகளையும் சில இடங்களில் பார்க்கிறோம். பல இடங்களில் சட்டவிரோதமான ஆபாசப் படங்கள் எடுப்பதற்கு பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதுதான் பிரதான காரணமாக இருக்கிறது. அதைக் கண்டும் காணாமல் அரசுகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே, மனித உரிமை மீறல்களில் உலகின் மூன்றாவது பெரிய குற்றமாக மனிதக் கடத்தல் இருக்கிறது. அதை, தடுப்பதற்கு அரசுகள் முன்வர வேண்டும்” என்றார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/3CdgrBf

Post a Comment

0 Comments