கோவை மாவட்டத்துக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “என் மண் என் மக்கள் முதல்கட்ட பாதயாத்திரை மிகவும் கடுமையாக இருந்தது. மக்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது. இதன்மூலம் தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. அதே சமயம் அதிகமான பிரச்னைகள் தென்தமிழகத்தில் உள்ளது. வேலைவாய்ப்பு, தண்ணீர் பிரச்னை, விவசாய வளர்ச்சி ஆகியவை எல்லாம் தென் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ளது. அதனால் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் பொழுதும் அங்குள்ள பிரச்னைகளுக்கு ஏற்ப மத்திய அமைச்சர்களை அழைத்து வந்தோம்.
கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் சிறு பிள்ளைகள் போல காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மதிக்க மாட்டேன் என சொல்கின்றனர். கர்நாடகாவுக்கும் இரண்டு மூன்று மாநிலங்களில் இருந்து தண்ணீர் உள்ளே வருகிறது. அந்த மாநிலங்களும் இது போன்று கூறிவிட்டால் என்ன செய்வார்கள்.
மருத்துவக் கல்லூரிகளாகட்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகட்டும், அம்ருத் திட்டங்கள் ஆகட்டும்... எதை எடுத்துக் கொண்டாலும் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காதது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில், 10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கான புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது. முதலமைச்சர் எதையும் பேசுவதற்கு முன்பு ஒரு முறை அதை ஃபேக்ட் செக் செய்ய வேண்டும்.
அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. திமுக ஊழல் பட்டியலை ஒரு முறை நேரடியாக வழங்கினோம். அடுத்து கவர்னரிடம் வழங்கிவிட்டு முக்கியமானவற்றை வெளியிட்டோம். அடுத்தமுறை நேரடியாக சிபிஐ விசாரணை கூட கேட்கலாம்.
‘திமுக மீது பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது. ஏன் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை.’ என சீமான் கேட்கிறார். அதிமுக ஊழல் பட்டியலை சீமான் வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் கேள்வி. ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் கூறுகிறார். சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும். அவர் தோற்கதானே போகிறார்.
ஜெயிக்க மாட்டோம் என தெரிந்தப்பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன. திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே. அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே. பிரதமர் என்ன ஊழல் செய்தார். சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர, நல்லது செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/8EmG6Ff
0 Comments