பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் முர்மு... கோவாவில் பேசியதென்ன?

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, பா.ஜ.க அரசு 22-வது சட்ட ஆணையம் அமைத்து, பொது சிவில் சட்டம் தொடர்பாக அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே முடிவாக, பொது சிவில் சட்டம் தேவையற்றது என எதிர்த்து வருகின்றன.

பொது சிவில் சட்டம்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் வகையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. மூன்று நாள் பயணமாக கோவா சென்றிருக்கும் திரௌபதி முர்மு, நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய திரௌபதி முர்மு, ``கோவாவின் காஸ்மோபாலிட்டன் (Cosmopolitan) கலாசாரத்தில் பெண்கள் சமத்துவத்துடன் பார்க்கப்படுகிறார்கள். இங்கு உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், மாநிலத்தில் பணிபுரிவோர்களிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும், இங்குள்ள மக்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொண்டது கோவாவுக்கு பெருமைக்குரிய விஷயம். (கோவாவில் காலனித்துவ கால போர்த்துகீசிய சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. கோவாவில் அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்).

திரௌபதி முர்மு

கோவாவில் வாழும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் இந்த பொது சிவில் சட்டம், இங்குள்ள காஸ்மோபாலிட்டன் கலாசாரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. அரசியலமைப்புச் சட்டத்துக்கு இது ஏற்றதும்கூட. அதோடு, நாட்டுக்கே இது முன்மாதிரி" என்று கூறினார்.

பொது சிவில் சட்டம் தொடர்பாக பலதரப்பட்ட மக்களிடையே வேறுபட்ட கருத்துகள் உலாவிக்கொண்டிருக்கும் வேளையில், பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் வகையில் திரௌபதி முர்மு பேசியிருப்பது அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

Junior vikatan 1

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Junior vikatan 2

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/e7WF9TB

Post a Comment

0 Comments