பிறந்த குழந்தைகளின் நரம்புகளில் காற்றைச் செலுத்தியும், வலுக்கட்டாயமாகப் பால் கொடுத்து மூச்சைத் திணறடித்தும், இன்சுலின் செலுத்தியும், 7 குழந்தைகளைக் கொன்றவர்; 6 குழந்தைகளைக் கொல்ல முயன்றவர், 33 வயதான லூசி லெட்பி.
இங்கிலாந்தின் செஸ்டர் மருத்துவமனையில், 2015, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தச் சம்பவம், தற்போது மக்களின் கவனத்தைப் பெற்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில், லூசி லெட்பியின் தண்டனை வழங்கும் விசாரணை, மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் லெட்பியும், அவரின் பெற்றோரும் ஆஜராகவில்லை என்றபோதும், அவர்கள் இல்லாமலே விசாரணையை நீதிமன்றம் மேற்கொண்டது.
மிகவும் கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையான முழு ஆயுள் தண்டனை (Whole life orders) வழங்க உத்தரவிடப்பட்டது. இங்கிலாந்தின் வரலாற்றில் இந்தத் தண்டனையைப் பெறும் நான்காவது பெண் இவர்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது நீதிபதி கோஸ், ``2015 முதல் 2016-ம் காலகட்டத்தின் இடையில் லெட்பியின் செயல்களின் கொடுமை மற்றும் கணக்கீடு, உண்மையிலேயே பயங்கரமானது.
குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது போன்ற சாதாரண மனித உள்ளுணர்வுக்கு முற்றிலும் முரணாகவும், மருத்துவத் தொழில்களில் பணிபுரிபவர்கள் மீது அனைத்து குடிமக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலும் மீறும் வகையிலும் நீங்கள் நடந்து கொண்டீர்கள்.
உங்களின் தீமையின் எல்லைக்குள், பிறரைத் துன்புறுத்தும் செயல்களின் மூலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள். இந்த விசாரணையின் போது, உங்கள் தவற்றுக்கு எந்தப் பொறுப்பையும் வெளிப்படையாக ஏற்க மறுத்துவிட்டீர்கள். இதில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.
குழந்தைகள் பிரிவு செவிலியராகப் பணியாற்றியபோது, 7 குழந்தைகளைக் கொன்றது, 6 குழந்தைகளைக் கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றங்களுக்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு முழு ஆயுள் தண்டனை உங்களுக்கு வழங்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இறந்த குழந்தையின் பெற்றோர்களும் இந்த விசாரணையில் இருந்தனர். தங்களின் குழந்தைக்கு நேர்ந்த அவலங்களை கேட்டபட்டி, கண்ணீர் விட்டனர்.
இந்தக் கண்ணீரை ஆற்றுப்படுத்த எந்தவொரு மாற்றும் இல்லை…
from India News https://ift.tt/9zJU2Py
0 Comments