மத்திய அமைச்சரை சந்திக்கும் துரைமுருகன்!
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் இடையே மேக்கேதாட்டூ விவகாரம் பெரிய அளவில் வெடித்திருக்கும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன். காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கை சந்தித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். மேலும் மேக்கேதாட்டூவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன்.
from India News https://ift.tt/mDt5Rdb
0 Comments