ஸ்டாலின் - பொன்முடி சந்திப்பு..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு, பின் சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களின் அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``இது எல்லாம் எதிர்ப்பாத்த ஒன்று தான். இன்னும் போகப்போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார்.
இதனிடையே, நேற்று மாலை தனது மகன் கெளதம சிகாமணியுடன் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை, இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை, அமைச்சர் பென்முடி முதல்வர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்தார். அடுக்கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணையின் போக்கு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
from India News https://ift.tt/kHKGWgQ
0 Comments