கலைஞர் நூற்றாண்டு நூலகம் - இன்று திறந்து வைக்கிறார் ஸ்டாலின்!
மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் ரூ.215 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், இன்று திறக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார்.
இந்நூலகமானது முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது. மேலும் நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட் வசதி,, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் அமைந்திருக்கிறது. சுமார் 6 லட்சம் புத்தகங்கள் வைக்கும் திறன் கொண்ட இந்த நூலகத்தில் தற்போது, 3.5 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களை சேர்ந்த, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ்ர்களுக்கு இந்நூலகம் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/ez2tKnS
0 Comments