அடுத்த 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கேரளாவில் இன்றும், கர்நாடகாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெல்லிக்கு விரைந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/63359425-7fb1-4f9b-8834-0d1521670a98/IMG_20221101_WA0029__1_.jpg)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வாரப் பயணமாக டெல்லிக்குச் சென்றிருக்கிறார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்துவரும் நிலையில், ஆளுநரின் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டால் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். இந்த நிலையில் டெல்லிக்குச் சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு ஒரு வாரகாலம் தங்கியிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/CG5AryX
0 Comments