கடலூரில், மாநகராட்சி சார்பில் பேனர்கள் அகற்றப்பட்டன. இதில் பா.ம.க சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதால், பா.ம.க-வினர் தகராறு செய்ததால் பேனர் மறுபடியும் வைக்கப்பட்டது.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கோட்டநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களின் கல்வி தரம் குறித்து ஆய்வுசெய்து, அங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.துப்பாக்கி உரிமத்தை கடந்த 10 மாதங்களாக புதுப்பிக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகக் கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேசிய துப்பாக்கிச் சுடும் வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.ஈரோடு, காஞ்சிகோவில் அருகே கான்கிரீட் பணிகளை மேற்கொள்வதை தடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நீர்வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்ததை எதிர்த்து, வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு, சித்தோடு அருகேயுள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுமேற்கொண்ட மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா.வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, ஈரோட்டில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி, ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிக்கல் ஶ்ரீ நவநீதேஸ்வர சுவாமி தேவஸ்தானம் மற்றும் ஶ்ரீ சிங்காரவேலர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.இந்தியன் வங்கியின் மேலான் இயக்குந ரும் தலைமை செயல் அதிகாரியுமான சாந்தி லால் ஜெயின் மற்றும் அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்தனர்.ஜெர்மன் சிறப்பு ஒலிம்பிக்கில் வாலிபால் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ஆற்றுப்படுகையை ஆழப்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.புதுச்சேரிக்கு வருகை தந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.சிங்கம் பட பாணியில் லாரியில் தனி அறை அமைத்து எரிசாராயம் கடத்திய லாரியை புதுச்சேரி கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இராமநாதபுரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வாரச்சந்தைக் கடைகளை அப்புறப்படுத்தியதால் பெண்கள் சாலையில் படுத்து மறியல் செய்தனர்.வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிட மத்திய மாநில அரசை வலியுறுத்தி, தேனி நீதிமன்றம் முன்பு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தென்பசியாரை அடுத்த ஓமந்தூர்ப் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில், 39 ஜோடிகளுக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், 39 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.திருநெல்வேலி: தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் நெல்லை ரயில் நிலையத்தை ஆய்வுசெய்தார்.திருநெல்வேலி: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் ரயில் நிலையத்தில் கலைநயத்துடன் அமைந்திருக்கும் பத்தமடை பாய்யின் அழகை ரசித்தார்.திருநெல்வேலி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.திருநெல்வேலி: இராஜவல்லிபுரம் அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாகப் பெய்து வரும் மழையால், நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியில் தென்னை மரம் விழுந்து சேதமடைந்த வீடு.நாகர்கோவில், திருப்பதிசாரம் தெப்பக்குளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் வெள்ளப்பெருக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.
0 Comments