ஓயவ அறவதத கலபநத வரஙகன Megan Rapinoe | தரககககச சலலம பதன - உலகச சயதகள

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், செஸ்னா வணிக ஜெட் அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இதில், அந்த ஜெட்டில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

வட கிழக்கு பிரேசிலில், கனமழையால் நள்ளிரவில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.

சூடானில் ராணுவப் பிரிவுகளுக்கு இடையிலான போர் 12-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று மேற்கு ஓம்டுர்மேன் பகுதியில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர்.

க்ரைம்

அமெரிக்காவில், 18 மாதக் குழந்தையை அதன் பெற்றோர் இரவு முழுவதும் காரில் விட்டுவிட்டு, பார்டிக்குச் சென்றதால், வெப்பம் தாளாமல் குழந்தை உயிரிழந்தது.

ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால், கார்கள் உள்ளிட்டவை அடித்துச்செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றும் திட்டத்தை ஜப்பான் கைவிடக் கோரி, தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திரமான மேகன் ராபினோ, இந்த சீசனின் இறுதியில் ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

பிரபல ஸ்பிரின்ட் ஸ்பெஷலிஸ்ட்டான மார்க் கேவென்டிஷ், Tour De France ல், கீழே விழுந்தார். வலியால் துடித்த அவருக்கு காலர்போன் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

கனடாவில் கோலாகலமாகத் தொடங்கியது மான்ட்ரியல் சர்க்கஸ் திருவிழா. இந்த சர்க்கஸ் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் எர்டோகனை ஆகஸ்ட்டில் சந்திக்க உள்ளார். Black Sea Grain தொடர்பான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



from India News https://ift.tt/1PFzL4o

Post a Comment

0 Comments