Kajol: யரயம இழவபடததம நககமலல...' - கரததககக களமபய எதரபப கஜல வளககம!

பாலிவுட் நடிகை காஜோல் அரசியல் தொடர்பான டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், ``கல்வியறிவு இல்லாத தலைவர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். இதை வெளியில் சென்று சொல்லப் போகிறேன். அந்த தலைவர்களால்தான் நாம் ஆளப்படுகிறோம். இதில் பெரும்பாலானோருக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இருக்கிறது. கல்வி உங்களுக்கு மாறுபட்ட தொலைநோக்குப் பார்வையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியா போன்ற நாடுகளில் மாற்றம் மிக மிக மெதுவாக இருக்கிறது. இதற்கு நமது பாரம்பர்யம் மற்றும் சிந்தனை செயல்முறையில் மூழ்கி இருப்பதுதான் காரணமாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கஜோல்

அரசியல்வாதிகளுக்கு அடிப்படை கல்வி இல்லாததுதான் நாட்டின் மாற்றத்துக்குத் தடையாக இருப்பதாக கஜோல் கூறியிருந்தது, சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவியது. இதையடுத்து கஜோல் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவசேனா (உத்தவ்) தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி இது குறித்து, ``படிப்பறிவு இல்லாத, தொலைநோக்குப் பார்வை இல்லாத தலைவர்களால் நாம் ஆளப்படுகிறோம் என்று கஜோல் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி

அவரது கருத்து உண்மையானதாக இருக்காது என்பதால், யாரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் கஜோல் யாரது பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் அனைத்து பக்தர்களும் கோபமடைந்துள்ளனர்" என்று பா.ஜ.க-வை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் கஜோல் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், ``யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இதனை தெரிவிக்கவில்லை. கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றித்தான் கருத்து தெரிவித்தேன். எனக்கு எந்த அரசியல் தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கம் கிடையாது. நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.



from India News https://ift.tt/PEGBnNY

Post a Comment

0 Comments