கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக ஒ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். இது குறித்து சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான விசாரணை வேகமாக நடைபெற வேண்டும். அந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/41bf0f4d-39e6-494c-882f-ef383a1ff57d/WhatsApp_Image_2023_07_11_at_9_34_50_AM.jpeg)
தமிழகத்தின் பிரபல ஊடகம் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கேரளாவரைச் சென்று அதிர்ச்சியளிக்கும் சில தகவல்களை வெளிக்கொண்டுவந்தது. ஆனாலும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம நடந்தபோது எஸ்டேட்டில் காவலராக இருந்த மற்றொருவர் இன்றுவரை உயிரோடு இருக்கிறார். அவரை அழைத்தும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. சட்டமன்றத் தேர்தலின் போது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைத்த 90 நாள்களில் கொடநாடு விவகாரத்தின் விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்தல் அறிகையிலும், இதை பிரதான வாக்குறுதியாக அளித்திருந்தார். ஆனால், ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதனால் திமுக அரசின் மீதான தமிழக மக்களின் விமர்சனங்கள் தொடர்கிறது. எனவே குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக சார்பில் முன்வைத்து வருகிறோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/702f8db5-631a-4dc4-b6bd-746ad0f207da/WhatsApp_Image_2023_07_11_at_9_34_48_AM__1_.jpeg)
இதை அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் மாநிலம் தழுவியளவில் 1.8.2023 அன்று அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நான் துணை முதல்வராக இருந்த போது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்ட ஒழுங்கு, காவல்துறை அனைத்தும் முதல்வர் வசம் இருந்தது. எனது துறை சார்ந்து மட்டுமே என்னால் இயங்க முடிந்தது. அதனால் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்றார்.
முழுமையான செய்தியாளர்கள் சந்திப்பு....
from India News https://ift.tt/0pmdNcj
0 Comments