மேட்டுப்பாளையம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் இறங்கி குப்பை அள்ளிய பெண் கவுன்சிலர்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கவும், குடியிருப்புப் பகுதிகளில்  தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

குப்பை அள்ளிய கவுன்சிலர்

ஆனால் அங்கு எந்தப் பணியும் நடக்கவில்லை என்று மக்கள் அவரிடம் முறையிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற, தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து ஜம்ரூத் பேகமே களத்தில் இறங்கிவிட்டார். அதன்படி குப்பை வண்டியை தள்ளிக் கொண்டே வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார்.

சாலையில் ஆங்காங்கே இருக்கும் குப்பைகளையும் அவராகவே அகற்றினார். ஆளுங்கட்சி கவுன்சிலர் குப்பை அள்ளியதை அந்தப் பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து கவுன்சிலர் ஜம்ரூத் பேகம் மக்களிடம், ``நகராட்சி ஆணையர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் சொல்லியும் பலனில்லை.

குப்பை அள்ளிய கவுன்சிலர்

என்னிடமே மோசமாக நடந்து கொள்கிறார்கள். கேட்டால் ஆள்கள் பற்றாக்குறை என்று உப்புசப்பில்லாத காரணங்களைச் சொல்கிறார்கள். இது மக்களின் அடிப்படை தேவை.  அடுத்தமுறை ஓட்டு கேட்டு வரும்போது மக்கள் கேட்பார்கள். அதனால் தான் நானே களத்தில் இறங்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.



from India News https://ift.tt/ewspg3J

Post a Comment

0 Comments