தமழ மத சமனகக இரககம அககறய வட எனகக அதகமக இரககறத - தடதடககம ஹச.ரஜ

``75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதற்குமுன்பு செய்யாததையெல்லாம் ஆளுநர் செய்கிறாரே?”

``செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சரிதான் என்றாலும், எதை எப்போது செய்ய வேண்டுமென்பது இருக்கிறது. தனியாக ஒருவரை மட்டும் டிஸ்மிஸ் செய்யலாமா அல்லது மேலும் சிலர் சிக்கப் போகிறார்கள், அப்போது செய்யலாமா என்று யோசித்திருப்பார்கள். அதனால் டிஸ்மிஸை திரும்பப் பெற மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கலாம்.”

ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழ்நாட்டு ஆளுநர் அரசை மீறி நடவடிக்கை எடுப்பதைப் போல, உத்தரப் பிரதேச ஆளுநர் யோகி ஆதித்யநாத் அரசை மீறி நடவடிக்கை எடுக்க முடியுமா?”

“நடவடிக்கை என்பது வழக்குகளைப் பொறுத்தது. நீங்கள் யார் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. யோகி ஆதித்யநாத் நல்ல மனிதர், நல்ல செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும்.”

“ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்கிறீர்கள்! 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வினரோ அல்லது கூட்டணி கட்சியினரோ ஒருவர் கூட ஊழல் செய்யவில்லையா?”

“பா.ஜ.க-வினர் மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காது என்பது சுத்தப் பொய். குஜராத்திலும், கர்நாடகாவிலும் கைது செய்யப்பட்டதும் நடந்திருக்கிறது.”

அண்ணாமலை

“கர்நாடகாவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஸ்டாலின் செல்லக்கூடாது என அண்ணாமலை எப்படிச் சொல்லலாம்?”

“அண்ணாமலை அப்படிச் சொன்னாரா என எனக்குத் தெரியாது. ஆனால் மு.க.ஸ்டாலினே போக மாட்டார் என எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. கனிமொழியோ, தயாநிதிமாறனோ செல்லலாம். ஏனென்றால், ஸ்டாலினுக்கு இந்தி தெரியாது. அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்றும் புரியாது.”

“காவிரி விவகாரம் குறித்துப் பேசும்போதுதான் அண்ணாமலை அப்படிச் சொல்லியிருக்கிறார். காவிரி விவகாரத்தில் பா.ஜ.க, காங்கிரஸுக்கு என்ன வேறு வேறு நிலைப்பாடா இருக்கிறது?”

“காவிரி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடும், காங்கிரஸ் நிலைப்பாடும் ஒன்றல்ல. காவிரி விவகாரத்தில் 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் ‘மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்டுவதை அனுமதிக்க முடியாது’ என ஷெகாவத் எப்போதோ கூறிவிட்டார். கர்நாடகத் தேர்தலில்கூட ‘மேக்கேதாட்டூவில் அணை கட்டுவோம்’ என்ற வாக்குறுதியை கொடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. இருவரின் நிலைப்பாடும் ஒன்றுதான் என எப்படிச் சொல்வீர்கள்?”

ஹெச்.ராஜா

“பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறுவது மற்ற பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் அரசியலா?”

“இந்த நாட்டில் பொது சிவில் சட்டம் வரும் என்று 1950-களில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாட்டில் இருக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வுகாண பொது சிவில் சட்டம்தான் அடிப்படையாக இருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்துவ பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு வேண்டும் என்பது போன்ற பல நல்ல விஷயங்கள் இதனால் நடக்கும். சீனா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் இருந்தாலும் ஷரியா சட்டம் இல்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு மதத்துக்கு ஒரு சட்டம் கூடாது என்பதுதான் நிலைப்பாடு.”

“சீமான் - ஹெச்.ராஜா இணைந்தால் அதைவிட கலியுகம் வேறு எதுவும் இல்லை என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?”

“கார்த்தி சிதம்பரம் 4 வருடங்களாக எங்கே போய்விட்டாய் என மக்கள் கேட்கிறார்கள். அதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும்.”

“நாங்கள் பா.ஜ.க-வை பின்பற்றவில்லை, பா.ஜ.க-தான் எங்களை பின்பற்றுகிறது என சீமான் சொல்கிறாரே?”

“தமிழ், திராவிடம் குறித்தெல்லாம் சீமான் பேசுவதற்கு முன்பிருந்தே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழ் மீது சீமானுக்கு இருக்கும் அக்கறையை விட எனக்கு அதிகமாக இருக்கிறது.”



from India News https://ift.tt/gpVZ3xi

Post a Comment

0 Comments