பீகாரில், ஸ்பெஷல் மசால் தோசைக்கு சாம்பார் வழங்க மறுத்த உணவகத்திற்கு, ரூ.3,500 அபராதம் விதித்து, நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகாரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணீஷ் பதக். இவர், தனது பிறந்தநாளான கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு, தன் அம்மாவுடன், கோலா மார்க்கெட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு ரூ. 140 மதிப்புள்ள ஸ்பெஷல் மசாலா தோசையை பார்சல் வாங்கிச் சென்றிருக்கிறார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது மசால் தோசையுடன் சட்னி மட்டுமே இருந்துள்ளது, சாம்பார் வைக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துக்குள்ளான மனீஷ் பதக், இரவு நேரம் என்பதால் வேறு வழியில்லாமல் வெறும் சட்னியுடன் மட்டும் தோசையைச் சாப்பிட்டுள்ளார்.
அடுத்த நாள் அந்த உணவகத்திற்குச் சென்ற வழக்கறிஞர் மனீஷ் பதக், இரவில் வாங்கிய மசால் தோசை பார்சலில் சாம்பார் வழங்காதது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததோடு, ரூ.140 கொடுத்து தோசை வாங்கினால், மொத்த ஓட்டலையும் வாங்கிவிட முடியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து மனீஷ், உணவகத்தின் சேவை நுகர்வோரை அவமதிப்பதாகவும், நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் உள்ளதாகக் கூறி, பக்சர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த வேத் பிரகாஷ் சிங் மற்றும் வருண் குமார் ஆகியோர், 11 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளனர். அந்தத் தீர்ப்பில், உணவகத்தின் அலட்சியத்தால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 2,000 அபராதமும், வழக்குச் செலவாக ரூ.1,500-ம் சேர்த்து மொத்தம் ரூ. 3,500 தொகையை நுகர்வோர் மனீஷுகு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/9RBwsg0
0 Comments