புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் தீப ஒளியேந்தி ஊர்வலமாக செல்லும் பிரெஞ்ச் குடியுரிமை வாசிகள்.தஞ்சை: புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.கன்னியாகுமரி: மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து தமிழக அரசும், குமரி மாவட்ட நிர்வாகமும் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.நாகர்கோவில்: ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது.கன்னியாகுமரி: ஆளூர் அ.தி.மு.க பேரூராட்சி செயலாளரும், முன்னாள் தலைவருமான லதா சந்திரன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.ஈரோடு: மாநகராட்சியில் மேயர் நாகரத்தினம் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. அருகில் துணை மேயர் செல்வராஜ் ஆணையாளர் ஜானகி ஆகியோர் உள்ளனர்ஈரோடு: மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி: கோட்டம் அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றதுவேலூர்: திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுவேலூர்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போக்குவரத்து குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுகோவை ; கொடிசியாவில் தொடங்கிய `அக்ரி இன்டெக்ஸ் 2023' வேளாண் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சிறுதானியங்கள் செஃல்பி பாயின்டில் புகைப்படம் எடுத்துக்கொண்ட கேரளா மாநில விவசாயிகள்.கோவை ; கொடிசியாவில் தொடங்கிய `அக்ரி இன்டெக்ஸ் 2023' வேளாண் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பழங்களை அறுவடை செய்யும் ரோபோ.ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்.திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் -வாகன நெரிசல்நீலகிரி: ஊட்டி அப்புக்கோட்டில், மகளிருக்கான புதிய முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டறவு சங்கத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை படுகர் இன மக்கள் அவர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.புதுச்சேரி: காரைக்காலில் இருந்து ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து கடத்திய வந்த 1100 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்: தப்பி ஓடிய நபரை நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர்:புதுச்சேரி: கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் "மாகி" கலாசார விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.தேனி; சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு கடன் முகம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொழில் முனைவோருக்கான கடன் வழங்கப்பட்டதுபுதுச்சேரி; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப் பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.வெற்றிகரமாக விண்ணில் ஏவபட்ட சந்திரயான்... ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்ட மக்கள்ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் - 3 விண்கலத்தை சுமந்தபடி எல்.வி.எம் 3, எம்4 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டதுஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் - 3 விண்கலத்தை சுமந்தபடி எல்.வி.எம் 3, எம்4 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டதுபாம்பன்: பாம்பன் பாலத்தில் விதிகளை மீறி மின்கம்பங்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்இராமநாதபுரம் : புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள்.
0 Comments