சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அதோடு கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் ஏற்கெனவே தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்குதலுக்குள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு!
ட்விட்டர் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி, இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கூறிய கருத்துகள் இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ``இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற போது அதனை சுற்றி பல்வேறு விஷயங்கள் நடந்தது. அந்த கட்டத்தில் அரசை விமர்சிக்கும் சில நபர்கள் குறித்தும் சில குறிப்பிட்ட பத்திரிகைகள் குறித்தும் எங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அவர்கள் சொன்னபடி செய்யாவிட்டால் இந்தியாவில் உள்ள ட்விட்டர் ஊழியர்கள் வீடுகள் ரெய்டு நடத்தப்படும் எனக் கூறினார். சொன்னபடியே செய்யவும் செய்தார்கள். இத்துடன் ட்விட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்று மிரட்டல்கள் வந்தன. இதெல்லாம் நடந்தது இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில்..” என்றிருக்கிறார். இந்த குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from India News https://ift.tt/zLO9Xx8
0 Comments