வேலூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றைய தினம் சென்னைக்கு வந்தடைந்தார். அமைச்சர் அமித் ஷா, பல்வேறு முக்கிய தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
இந்த நிலையில், இன்றைய தினம் வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பா.ஜ.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். அதற்காக வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
from India News https://ift.tt/xlQjiFR
0 Comments