தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய நபராக வலம் வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் ஜூன் 13-ம் தேதிஅமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. 14-ம் தேதி அதிகாலை வரை சோதனை நீடித்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து செல்லும் போது, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் உள்ள அவரை அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, சேகர் பாபு உள்ளிட்டவர்கள் சந்தித்து சென்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளிடன் தனது இல்லத்தில் காலை 4 மணி முதலே ஆலோசனை செய்து வருகிறார். அமைச்சர் பதவியில் இருக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்படும்போது, அந்த துறைக்கு பொறுப்பு அமைச்சரை நியமித்தால்தான், பணிகள் சுணக்கம் இல்லாமல் நடைபெற வைக்கமுடியும். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைக்கு பொறுப்பு அமைச்சர் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்படி பொறுப்பு அமைச்சர் நியமித்தாலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்வார் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இலாகா மாற்றம் நடைபெறும் பட்சத்தில், டாஸ்மாக் மற்றும் மின்சாரம் பெரிய துறை என்பதால், அதை ஜூனியர்கள் கையில் கொடுக்கமுடியாது. எனவே, சீனியர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ஆகியோரிடம் கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் அடிப்படுகிறது. ஆனால், ஐ.பெரியசாமி கூடுதல் பொறுப்பு வேண்டாமென்று கூறிவிட்டதால், கே.என்.நேரு அல்லது எ.வ.வேலு-வுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறாரா என்பதை அமலாக்கத்துறை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!
from India News https://ift.tt/6aC7zhr
0 Comments