பாலியல் உறவை அதிகாரபூர்வ விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன் அரசு... உண்மை என்ன?

பல பொய்யான செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெறுவதுண்டு. அந்த வகையில், `உலகிலேயே முதன்முறையாக பாலியல் உறவை அதிகாரபூர்வ விளையாட்டாக ஸ்வீடன் அரசு அங்கீகரித்துள்ளது. இந்த விளையாட்டு ஜூன் 8-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது' என செய்திகள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

ஸ்வீடன் அரசு

அதாவது பாலியல் உறவில் போட்டியிடும் நபர்கள் 16 பிரிவுகளின் கீழ் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். மயக்குவது, ஓரல் செக்ஸ், மசாஜ் செய்வது, ஃபோர்பிளே போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். 

தனிப்பட்ட போட்டிகள் 45 - 60 நிமிடங்கள் வரை நீடிக்கும். பல நாடுகளைச் சேர்ந்த 20 பேர் போட்டியில் பங்கேற்பார்கள். மூன்று நடுவர்கள் கொண்ட குழு, சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களைத் தேர்வு செய்யும். 

இறுதி முடிவானது தம்பதியினரிடையே உள்ள கெமிஸ்ட்ரி, பாலியல் உறவு குறித்து இருவருக்குமான உறவு மற்றும் சகிப்புத்தன்மை நிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து இருக்கும். போட்டியாளர்களுக்குப் பயிற்சி அளித்து விருதுகள் வழங்கப்படும்.

பாலியல் உறவில் மக்கள் பயிற்சி பெற வேண்டும். மனிதர்களுக்கு உடலுறவில் உண்டாகும் உடல் மற்றும் மனதாக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட வேண்டும் என, ஸ்வீடிஷ் பாலியல் கூட்டமைப்பு உரிமையாளர் ட்ராகன் ப்ராக்டிக் (Dragan Bratic) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதற்காக ஜனவரி மாதம் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர விண்ணப்பித்து, பதிவு செய்து, நிறுவனத்திற்கான எண்ணைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

sex

இந்நிலையில், பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு ஸ்வீடன் அரசின் விளையாட்டுத்துறை கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதோடு ஏப்ரல் மாதம் ஸ்வீடிஷ் பாலியல் கூட்டமைப்பின் விண்ணப்பம் முழுமையடையாமலும், சில தேவைகளைப் பூர்த்தி செய்யாமலும் இருந்ததால் நிராகரிக்கப்பட்டது என தெளிவுபடுத்தியுள்ளது. செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் ஸ்வீடன் விளையாட்டுக் கூட்டமைப்பில் இல்லை எனவும் அரசுத் தரப்பு விளக்கமளித்துள்ளது.



from India News https://ift.tt/H5ETxVy

Post a Comment

0 Comments