சநதல பலஜ இலகவ பரதத தலம... லஸடடல தஙகம தனனரச மததசம டக ஆனத எபபட?!

அமலாக்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவை பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் கவனித்து வரும் இலாகாகளான, மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு, ஆயத்தீர்வை, இரு வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி - ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ``அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்று இன்னும் தெளிவான பார்வை அரசுக்கு கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் டெல்லி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதால், செந்தில் பாலாஜி முழு நேரமாக அதிலேயே கவனம் செலுத்த நேரிடும். மேலும், அவரின் உடல்நலமும் கவனிக்கப்பட வேண்டி உள்ளதால், வழக்கில் இருந்து விடுப்பட்டாலும், அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

செந்தில் பாலாஜி கவனித்து வரும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை என்பது, மிக முக்கியமான துறைகளாகும். இன்னும் கோடை காலம் முழுமையாக முடிவடையாததால், மின் தேவை அதிகமாகி வருகிறது. இதனால், பரவலாக மின்தடை, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கொடுப்பதில் இடையூறு ஏற்படுகிறது. இதை உடனே சமாளிக்கவில்லையென்றால், அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

செந்தில் பாலாஜி

மதுவிலக்கை பொறுத்தவரை தற்போது பெரும் பிரச்னை ஓடிக் கொண்டு இருக்கும் ஒரு துறை. மது குடித்து இறப்போர், கள்ளச்சாராய விவகாரம், டாஸ்மாக் பார் விவகாரம் என பிரச்னைகளாலேதான் அந்த துறை செயல்படுகிறது. இந்த நிலையில், துறைகளை வேறு அமைச்சர்கள் வைத்து கவனிக்க தலைமை முடிவு செய்தது.

அதன்படி, சீனியர்களான ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோருக்கு கொடுக்கலாம் என்ற பேசப்பட்டது. ஆனால், சீனியர்களுக்கு அதில் விருப்பமில்லை. இதனால், தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் அன்பில் பெயரும் விவாதிக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வித்துறையை கையில் வைத்துக் கொண்டு, வேறு துறையில் கவனம் செலுத்தினால், அது மாணவர்கள் நலனை பாதிக்கும் என அன்பிலும் கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

எனவே இறுதியாக, நிதியமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க தலைமை முடிவெடுத்து இருக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது பொதுவெளியிலும், கட்சிக்குள் க்ளீன் இமேஜ் இருப்பதால், அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட உள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியாக கையாளும் திறமை அவருக்கு இருக்கிறது. அதேபோல, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையை, செந்தில் பாலாஜியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க முடிவானது. முத்துசாமியும் தலைமை மீறி எதையும் தன்னெச்சையாக செய்யும் நபர் இல்லை. அதன்படி, சீனியாரான வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்குத் துறை கொடுக்கப்படவுள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்." என்றனர் விரிவாக.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

இலாகா மாற்றம் தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைத்தும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ``அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதால், மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை அமலாக்கத்துறை கைதுசெய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது" என ஆளுநர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.



from India News https://ift.tt/dUs14rD

Post a Comment

0 Comments