வகனர: ரஷயரகள ஒரவர ஒரவர கலல வணடம என வரமபகறரகள" - பதன கடடம

ரஷ்யா - உக்ரைனுக்கிடையே ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்துவரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. சமீபத்தில் வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் மத்தியில் வெடித்த மோதல் பெரும் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின், ``வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது போன்ற துரோகம். இதற்கு வாக்னர் குழுவுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்" என எச்சரித்திருந்தார்.

வாக்னர்: யெவ்ஜெனி ப்ரிகோஜின் - புதின்

இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுடன் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக வாக்னர் படை பின்வாங்கியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ரஷ்ய நாட்டு மக்களிடம் தொலைகாட்சி மூலம் பேசிய புதின், ``வாக்னர் குழுவின் கிளர்ச்சியின் போது, உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும், ரஷ்யர்கள் ஒருவரையொருவர் கொலை செய்துக்கொள்ள வேண்டும் என விரும்பினர். ஆனால், எனது உத்தரவின் பேரில் பெரிய அளவிலான தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு ரஷ்யர்களின் தேசபக்தி பெரும் காரணம். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யாவின் எதிரிகள் விரும்பியது துல்லியமாக இந்த சகோதர படுகொலையைத்தான். ரஷ்யாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல், உள்நாட்டு கொந்தளிப்புகளை ஏற்படுத்த செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்பதை ரஷ்ய பொதுமக்களின் ஒற்றுமை காட்டுகிறது. வாக்னர் குழு பாதுகாப்பு அமைச்சகம் அல்லது பிற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் ரஷ்யாவிற்கு சேவை செய்ய உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

அல்லது உங்கள் குடும்பத்திடமே திரும்புவதற்கு விரும்பினால் அதையும் செய்துக்கொள்ளுங்கள்." எனத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "அணு ஆயுதம் கொண்ட ரஷ்ய நாட்டில் நிலவும் கொந்தளிப்பை அதிகாரிகள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

எங்கள் கவலைகள் குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் சரியான நேரத்தில் இராஜதந்திர வழிகள் மூலம் பேசினோம். ஆனால் ரஷ்ய தூதர் லின் ட்ரேசி,'இது ரஷ்யாவின் உள் விவகாரம், இதில் அமெரிக்கா தலையிடக்கூடாது' எனத் தெரிவித்தது." எனக் கூறியிருக்கிறார்.

ஜெலன்ஸ்கி

இதற்கிடையில், உக்ரேனிய ராணுவத் தலைவர்கள், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் தாங்கள் முன்னேறி வருவதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பாக்முட் நகருக்கு அருகே ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடும் வீரர்களை சந்தித்திருக்கிறார். இது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் பயணம் எனக் கூறப்பட்டுள்ளது.



from India News https://ift.tt/axsGTt2

Post a Comment

0 Comments