மதர: பதவ வணடம எம.எல.ஏ; பகரகள கடடய தண மயர! - எனன நடககறத மநகரடசயல?

மதுரை மாநகராட்சியின் 19-வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் பல்வேறு பணிகள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் கலந்து கொண்டு பேசும்போது, "என் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் எந்தவொரு மக்கள் நலப்பணியும் முறையாக நடைபெறவில்லை.

எம்.எல்.ஏ பூமிநாதன்

பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதிகள் குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் கூறியும் எதுவும் நடைபெறவில்லை. பாதாள சாக்கடை பணிகள் பாதியில் நிற்கிறது. பணிகளை விரைவுபடுத்த பலமுறை கூறியும் ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொகுதிக்குள் பொதுமக்கள் போராடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கக் கூடாது.

முதலமைச்சரிடமும், மதிமுக தலைவரிடமும் எனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று சொல்லும் மனநிலை எற்பட்டுள்ளது." என்றார்.

மாமன்ற கூட்டம்

இதனை தொடர்ந்து பேசிய 54-வது வார்டு திமுக கவுன்சிலர் நூர்ஜஹான், "மதுரை மாநகராட்சியில் குழுத் தலைவருக்கு உரிய மரியாதை தருவதில்லை. கணக்குக் குழு, கல்விக் குழு போன்ற குழுத் தலைவர்களுக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கப்படுவதில்லை" என மேயர் இந்திராணியை பார்த்து கேட்டார்.

அப்போது நூர்ஜஹானிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் மாமன்ற கூட்டமே பரபரப்படைந்தது.

தொடர்ந்து பேசிய திமுக மண்டலத் தலைவர்கள், "கடந்த 19 கூட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம், அதற்கு பதில் அளிப்பதில்லை, வரும் கூட்டங்களில் அக்கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தவேண்டும்" என்று கூற, "முதலில் நீங்கள் கூட்டத்தில முழுமையாக இருங்க, பாதியில் வெளில போகக்கூடாது" என மேயர் கூறினார்.

அப்போது மேயர் அருகே அமர்ந்திருந்த சிபிஎம் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், "என்னோட வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை, இதுகுறித்து 19 கூட்டத்திலும் கோரிக்கை வைத்துவிட்டேன், பக்கத்து வார்டில் ரோடு போடுறாங்க, ஆனால், என் வார்டில் பாகுபாடு காட்டுறாங்க. பலமுறை சொல்லியும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய பதில் தருவதே இல்லை" என்றார்.

மேயர் இந்திரானி-துணை மேயர் நாகராஜன்

மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான சிபிஎம், மதிமுக-வினரே எந்த பணிகளும் நடக்கவில்லை என மேயருக்கு எதிராக கொதித்தெழுந்ததை பார்த்து அதிமுக கவுன்சிலர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

இதனிடையே கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கு  செய்தியாளர்களிடம் பதில் சொல்லாமல் கிளம்பிச்சென்றார் மேயர்.

அது மட்டுமின்றி மேயரின் பாதுகாப்புக்கு போலீஸ், மாநகராட்சி பாதுகாவலர்கள் இருக்கும்போது, சம்பந்தமில்லாத நபர்களை பாதுகாப்புக்கு என அழைத்து வந்ததாகவும், அந்த நபர்கள் பாதுகாப்பு போலீஸை தள்ளிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

மாமன்றக் கூட்டம்

மேயரை சொந்தக்கட்சியினர் எதிர்த்து வந்த நிலையில் தற்போது கூட்டணிக் கட்சியினரும் எதிர்க்க தொடங்கியுள்ளது மதுரையில் சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.



from India News https://ift.tt/MlUHLgt

Post a Comment

0 Comments