கரர: மநகரடச கடடததல வககவதம... அதமக கவனசலரகள அடகக பயநத தமக கவனசலர!

கரூர் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வார்டு பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப்பணி குறித்து மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மாமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருவர், "தூய்மைப் பணி நடந்திருந்தால், அதற்கான புகைப்பட ஆதாரங்களைக் காட்ட வேண்டும்" என்று கேட்டனர்.

இதற்கு, ``இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும். மாமன்றக் கூட்டத்தில் இது குறித்து விளம்பர நோக்கத்தில் விவாதம் எழுப்பக் கூடாது" என தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க கவுன்சிலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதமும், மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு

ஒரு கட்டத்தில், தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் சக்திவேல், அ.தி.மு.க தரப்பு கவுன்சிலர்களை கை ஓங்கித் தாக்குதல் நடத்தும் முறையில் ஒருமையில் பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கூட்டத்தில் களேபரம் ஏற்படும் சூழல் நிலவ, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் இரு தரப்பினரையும் பேசி சமாதானம் செய்தார். இருந்தபோதும், தொடர்ந்து கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பு கவுன்சிலர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. இதனால், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் கவிதா கணேசன் அறிவித்ததோடு, மாமன்றக் கூட்டத்தை முடித்து வைத்தார்.



from India News https://ift.tt/V2hmz05

Post a Comment

0 Comments