மும்பை காந்திவிலியில் `கபோல் வித்யாநிதி இண்டர்நேசனல்' பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் காலை பிரார்த்தனையின்போது மசூதிகளில் ஒலிபரப்பாகும் `அஸான்' ஒலிக்கபட்டது. அதை அந்த வழியாக காலையில் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் மற்றும் குழந்தைகளை பள்ளியில்விட வந்தவர்கள் கேட்டனர். அவர்கள் அசான் ஒலிக்கப்படுவதை தங்களது மொபைல் போனில் வீடியோ பதிவுசெய்து, வாட்ஸ்அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. உடனே இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சில பெற்றோரும் பள்ளிக்கு வெளியில்கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ யோகேஷ் சாகரும் கலந்துகொண்டார். உடனே பள்ளி முதல்வர் வந்து நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால் அதை ஏற்காத இந்து அமைப்புகள் மற்றும் சிவசேனாவினர் உள்ளூர் போலீஸில் புகார் செய்தனர். இது குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெற்றோர், ``இந்து பள்ளி என்று நினைத்துதான் எங்களது குழந்தைகளை இங்கு அனுப்புகிறோம். இங்கு அஸான் ஒலிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. எங்காவது மதரஸாவில் இந்து பிரார்த்தனை பாடல் ஒலிக்கப்படுகிறதா?" என்றனர்.
இது குறித்து பள்ளி முதல்வர் ரேஷ்மா ஹெக்டே பேசுகையில், ``அனைத்து மதமும் பிரார்த்தனையில் இடம் பெறவேண்டும் என்பதற்காக அஸான் ஒலிக்கப்பட்டது. இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மொபைல் போன் மூலம் ஒலிபெருக்கியில் அஸான் ஒலிக்கச் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆசிரியர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் அதிகாரி அஜய், ``பள்ளியில் அஸான் ஒலிக்கப்பட்டதாக எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. இன்னும் வழக்கு பதிவுசெய்யப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
from India News https://ift.tt/eTnhUXb
0 Comments