பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், அளவுக்கு அதிகமாக மது அருந்தக்கூடியவர் என்ற புகார் இருந்து கொண்டிருக்கிறது. மது அருந்துவதை ஒப்புக்கொண்ட பக்வந்த் மான், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் போது நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், மது அருந்துவதை விட்டுவிடுவதாக தெரிவித்திருந்தார். இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். ஆனாலும் பக்வந்த் மான் மீதான குடிகாரன் என்ற குற்றச்சாட்டு மட்டும் ஓயவில்லை. அதுவும் கடந்த 12 ஆண்டுகளாக இரவும், பகலும் தொடர்ந்து மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இக்குற்றச்சாட்டு குறித்து பக்வந்த் மான் அளித்த பேட்டியில், ``12 ஆண்டுகளாக இரவும், பகலும் மது அருந்தினால் யாராவது உயிரோடு இருப்பார்களா? அப்படி என்றால் என்னுடைய கல்லீரல் என்ன இரும்பினால் செய்யப்பட்டதா?. என்னைப்பற்றி குறை கூற அவர்களிடம்(எதிர்க்கட்சிகளிடம்) எதுவும் இல்லை. அதனால்தான் நான் எந்நேரமும் குடித்துக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் நான் காலை 6 மணிக்கே எழுந்து ஃபைல் பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன். அதனால்தான் கடந்த 70 ஆண்டில் செய்ய முடியாததை 1.5 ஆண்டில் செய்து முடித்திருக்கிறேன்” என்றார்.
கடந்த ஆண்டு பக்வந்த் மான் ஜெர்மன் சென்று இருந்த போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டதாக புகார் எழுந்தது. பக்வந்த் மானால் குடிபோதையில் சரியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. ஆனால் இக்குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்து இருந்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் இந்தியாவில் எங்கு சென்றாலும் பக்வந்த் மானையும் தன்னுடன் அழைத்து செல்கிறார்.
இது குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பக்வந்த் மான் பைலட்டா என்று கேட்டுள்ளார். கெஜ்ரிவால் தற்போது சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்கிறார். அவருடன் பக்வந்த் மானும் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கத்ஹு.
from India News https://ift.tt/NfYZo62
0 Comments